ஆட்டோ ஓட்டுநர்கள் 85 குடும்பத்துக்கு நிவாரண பொருள்கள் வழங்கல்: சாத்தான்குளம்

சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டில் சாத்தான்குளம் ஆட்டோ ஓட்டுநர்கள் 85 குடும்பத்துக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதையொட்டி பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் வந்த எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவை, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் சந்தித்து முறையிட்டனர். அதன்பேரில் சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் சாத்தான்குளத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் குடும்பம் 85 பேர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு வழங்கப்பட்டது. இதனை ஒன்றிய அதிமுக செயலர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி வழங்கினார்.

நிகழ்வில் பேருராட்சி செயல் அலுவலர் உஷா, அரசு ஓப்பந்தகாரர் மலையாண்டிபிரபு, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி, ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், நகர செயலர் செல்லத்துரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவர் சின்னத்துரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், ஒன்றிய மாணவரணி செயலர் ஸ்டேன்லி, ஒன்றிய துணை செயலர் எஸ். சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்