அரை நிர்வாணத்துடன் மாயமடைந்து கிடைந்த பள்ளி மாணவி – நெல்லை

நெல்லை உவரி அருகே கூட்டப்பனை கிராமத்தில் லிவங்ஸ்டன் – வினிட்டா தம்பதியரின் மகள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் அரை நிர்வாணத்துடன் மாயமடைந்த மாணவி உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையில் மாணவி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்க்கொண்டு இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.