அரசு பள்ளிகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்…

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் தரத்தை கண்காணிக்கும் ஆண்ட்ராய்டு செயலியை
பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வகுப்பறைகளில் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறன், கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மற்றும் மாணவர்களின் கேள்விகள் போன்ற பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இந்த செயலி உதவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைக் கண்காணிக்க வரும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளையும், மாணவர்களின் கருத்துகளையும் சுலபமாக மதிப்பீடு செய்ய இயலும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *