“அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப்”

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் இதோ:

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் கைரேகை ( பிங்கர்பிரிண்ட் பாஸ்வர்ட் ஆதென்டிகேஷன் ), தொடர்ச்சியாக கேட்கும் வாய்ஸ் மெசேஜ் பயன்கள் மற்றும் அடிக்கடி மெசேஜ் அனுப்புகின்ற நண்பர்களின் வரிசை பட்டியலை முன்னிறுத்தும் வசதிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தப்பட்டது.

வாட்ஸ்அப் தனது போட்டியாளர்களான டெலிகிராம் மற்றும் மெசஞ்சர் போன்றவற்றை விட முன்னேற வழக்கம் போல் அதன் பயன்பாட்டை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

வாட்ஸ்ஆப் சாட் தற்பொழுது பிங்கர் பிரிண்ட் ஆதென்டிகேஷன் போன்றவற்றை நிறைய பயன்பாடுகளை அறிமுகப்படுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வாட்ஸ்ஆப் தனது iOS மற்றும் Android பயனர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களையும் மேம்படுத்தியுள்ளது. ஆனால் பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் ஆப் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் பயன்பாட்டில் அதிக உள்ளது.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இன்னும் சில அம்சங்களைப் பார்ப்போம் :

முதலில் பல்வேறு வலைத்தளங்களில் வாட்ஸ்ஆப் சாட்களை பயன்படுத்த நேரிட்ட போதில் தோல்வியில் முடிந்துள்ளது ஆதலால் புதிய மல்டி-பிளாட்பார்ம் அம்சம் முதலில் ஆப்பிளின் ஐபாடிற்கான முழுமையான பயன்பாடாக வரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

கூகிள் அசிஸ்டன்ட்ஐப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கால் (அழைப்புகளை) மேற்கொள்ளுங்கள்: கூகிள் அசிஸ்டென்ட் உதவியுடன் இப்போது வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிகம் அம்சங்கள் பயன்பாடுகளில் வருகிறது. முன்னதாக, பயனர்கள் கூகிள் அசிஸ்டென்ட் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே பகிர முடிந்தது. இருப்பினும், புதிய அம்சம்கள் பயனர்களை ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய அனுமதிக்கும். அண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் பயன்பாட்டைப் அப்டேட் செய்வதன் மூலம் அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். அப்டேட் செய்து முடிந்ததும், கூகிள் அசிஸ்டென்ட் ஆன் செய்து “ஏய் கூகிள், வாட்ஸ்அப் வீடியோ <பெயர்>” என்று சொல்லுங்கள். இந்த அம்சம் iOS பயனர்களுக்கு வரும் மாதங்களில் வெளியிடப்படும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாதிரியான அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.