அடுத்தடுத்த அதிரடி திட்டங்களால் ஹீரோவானார் ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். அடுத்தக்கட்ட அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 14400 என்ற எண்ணிற்கு போன் செய்து அந்த அதிகாரி பற்றி கூறலாம். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்தடுத்து அதிரடி திட்டங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.