உலக திருநங்கை அழகிப் போட்டி – தமிழக திருநங்கை நமிதா!

சென்னை ராயப்பேட்டையில் மாரிமுத்து – வெண்ணிலா தம்பதிக்குப் பிறந்தவர் திருநங்கை நமிதா. பொறியியல் படிப்பை முடித்த நமிதா மாடலிங் செய்வதுடன், தற்போது திரைப்படங்களிலும் முகம் காட்டி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டம் வென்று உள்ளார் மற்றும் 2015ம் ஆண்டில் கூவாகம் பட்டத்தையும் தட்டிச் சென்றார். மேலும் 2017ம் ஆண்டு பெங்களூரில் நடந்த அழகிப் போட்டியிலும் பட்டம் வென்றவர், 2018ம் ஆண்டில் மிஸ் இந்தியாப் பட்டத்தையும் வென்று உள்ளார். தற்போது உலகளவிலான போட்டிக்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்றுள்ளார். திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், இதுவரை இந்தியா சார்பாக யாரும் கலந்துகொள்ளாத நிலையில், தற்போது அந்தக் குறையைப் போக்கும் வகையில் நமிதா கலந்துகொள்கிறார்.