உடன்குடியில் திமுக சார்பில் 1275பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி உடன்குடியில் திமுக சார்பில் 1275பேருக்கு நலத்திட்ட உதவிகளை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்.

உடன்குடி மெயின் பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை வகித்தார். யூனியன் துணைச் சேர்மன் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், நகர செயலாளர் ஜான்பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் நெசவாளர்அணி மகாவிஷ்ணு, மகளிரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெசிபொன்ராணி, துணைஅமைப்பாளர்கள் வர்த்தகஅணி ரவிராஜா, மாணவரணி முகைதீன், சிறுபான்மை அணி சிராசுதீன், ஷேக் முகம்மது, நகர பொருளாளர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளி பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், து£ய்மைப்பணியாளர்களுக்கு நலிந்தோர்கள் உட்பட 1275பேருக்கு உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள குமாரலெட்சுமிபுரத்தில் நடந்த விழாவிற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார். செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், ஊராட்சி செயலர் விஜயன், யூனியன் துணைச்சேர்மன் மீராசிராசூதீன், மாவட்ட கவுன்சிலரும், மாவட்டமகளிரணி அமைப்பாளருமான ஜெசிபொன்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூன்று பேருக்கு தையல் மிஷின், இருநபர்களுக்கு அயன்பாக்ஸ் மற்றும் அந்தபகுதிமக்களுக்கு அரிசி மற்றும் அன்றாடதேவைக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் வார்டு செயலர்கள் தினகரன், ரூபன், முத்துசாமி, கோபால், மண்டகபொடியான், ராஜேந்திரன், அருண், நோவா, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஊராட்சி செயலர்கள் பரமன்குறிச்சி இளங்கோ, குலசேகரன்பட்டினம் அலாவுதீன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சலீம், நகர அவைத்தலைவர் திரவியம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பாய்ஸ், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *