தொடரும் மழை -நிரம்பும் நீர் நிலைகள் – மகிழ்ச்சியில் விவசாயிகள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இதனால் நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், லட்ச தீவு பகுதியில் வேகமாக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *