நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி துவக்கம்.ஓட்டப்பிடாரம் தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் , நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பல கோடி பனைத்திட்டத்தின் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்வின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரம் குளத்தைச் சுற்றிலும் பனை விதை நடப்பட்டது.முன்னதாக சத்தியம் திரையரங்கு முன்பு இருந்து துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு தமிழ்நேயன் தலைமையில் ஊா்வலமாக கோமஸ்புரம் குளத்திற்கு சென்றனா் . அங்கு பனை விதைகளை நட்டினாா்கள் இந் நிகழ்வில் மண்டலத் தலைவா் இசக்கித்துரை உட்பட பலா் கலந்து கொண்டனா்
