volleyball

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள்…

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு – பாரதியார் தின மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் தருவைகுளம் கடற்கரையில் சீரும் சிறப்புமாகவும் நடைபெற்றது.

இன்று 29ம் தேதி மாணவிகளுக்கான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் பல சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், தருவைக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார்.உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சதிஷ், ரவிகாந்த் மற்றும் பல உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

30,31ம் தேதி மாணவர்களுக்கான கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இனி வரும் இரண்டு நாட்கள் போட்டிகளில் விறுவிறுப்புக்கு எந்த ஒரு பஞ்சமும் இருக்காது என எதிர் பாக்கப்படுகிறது.

14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகள்:

  • முதல் பரிசு நாமக்கல் மாவட்டம் ஆரியன் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி,
  • இரண்டாம் பரிசு கரூர் மாவட்டம் st.theresa உயர்நிலை பள்ளி,
  • மூன்றாம் பரிசு புதுக்கோட்டை மாவட்டம் மெட்ரம் இராமநாதன் உயர்நிலை பள்ளி.

17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகள்:

  • முதல் பரிசு கிருஷ்ணகிரி மாவட்டம் government hr.sec.school,
  • இரண்டாம் பரிசு நாகப்பட்டினம் மாவட்டம் Mv hr.sec.school,
  • மூன்றாம் பரிசு கன்னியாகுமரி மாவட்டம் Smrv hr.sec.school.

19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகள்:

  • முதல் பரிசு ஈரோடு மாவட்டம் குமுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி,
  • இரண்டாம் பரிசு கன்னியாகுமரி மாவட்டம் Smrv hr.sec.school,
  • மூன்றாம் பரிசு கரூர் மாவட்டம் st.theresa உயர்நிலை பள்ளி.