தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் 7 ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்புகளுக்கு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வழங்கினார்.
கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் 7 ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்புகளுக்கு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க மானியத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (11.07.2020) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, 7 ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.8 லட்சம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டம் வேளண் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்கல் துணை இயக்க திட்டத்தின்கீழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஊரக அளவிலான குழு கூட்டமைப்பு (பெண்கள் குழு) 7 குழுக்களுக்கு கிராம அளவிலான வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் தலா கூட்டமைப்பு நிதி தலா ரூ.2 லட்சம், மானியம் ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்க தலா ரூ.8 லட்சம் மானியம் என மொத்தம் ரூ.56 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கயத்தார் வட்டாரத்தில் தெற்கு மயிலோடை மற்றும் சிதம்பராபுரம், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் கவர்னகிரி, கோவில்பட்டி வட்டாரத்தில் வில்லிசேரி, விளாத்திகுளம் வட்டாரத்தில் பேரிலோவன்பட்டி மற்றும் குருவார்பட்டி, புதூர் வட்டாரத்தில் நாகலாபுரம் ஆகிய 7 ஊரக அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் ஒன்றுக்கு தலா ரூ.8 லட்சம் மானியம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் கருவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்த்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர் உசேன், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி (கோவில்பட்டி), உதவி பொறியாளர் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, குருராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.