எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் தேசிய அளவிலான வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவிதொகையாக ரூ.12000, வழங்கப்படும். இந்நிலையில் கடந்த டிசம்பா் 15ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட திறனாய்வுத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியாகின இதில் தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி. நடுநிலைப்பள்ளி மாணவா்கள் கோ. பொிய கருப்பசாமி, பி. ராஜேஷ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளாா்கள். வெற்றி பெற்ற மாணவா்களை அருட்தந்தை நெல்சன்ராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி தா.வின்சென்ட் மற்றும் ஆசிாியா்களும் பாராட்டி சிறப்பித்தனா்.
