சண்டே லாக்டவுண் 7.0 – தூத்துக்குடி

தமிழக அரசு அறிவிப்பின் படி ஆகஸ்ட் 02,09,16,23,30 ஆகிய தேதிகளில் மட்டும் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி 015.08.2020 இரவு 12 மணி முதல் 17.08.2020 காலை 6 மணி வரை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளது இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் சென்று வருகின்றனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பால் விநியோம், மருத்துவமனைகள், மருத்து கடை, மருத்துவ வாகனங்கள், அவசர ஊர்தி, மருத்துவ வசதிகளுக்கு தனியார் வாகனங்கள் இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் வரும் ஆகஸ்ட் 23,30 ஆகிய ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. எனவே முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *