தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு அறுசுவை உணவுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் ஜோதி ராஜா, அம்பா சங்கர் மற்றும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு அறுசுவை உணவுகள் காலையும் மதியமும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.