தூத்துக்குடி கோட்டம், ஓட்டப்பிடாரம் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும், கச்சேரி தளவாய்புரம், வெள்ளாரம், K.சுப்பிரமணியபுரம், K.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் நாளை 17:07:2020 வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் 18.07.2020 சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5:00மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்றும், அய்யனார்புரம் உப மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் மேலமருதூர், A.Mபட்டி, A.குமாரபுரம், அரசடி பனையூர், புளியமரத்து அரசடி, குறுக்குச்சாலை, ராமச்சந்திராபுரம், வள்ளிநாயகிபுரம், லட்சுமிபுரம் வேடநத்தம் ஆகிய பகுதிகளில் நாளை 17.7.2020 வெள்ளிக்கிழமை அன்று உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் செயற்பொறியாளர் /நகர்/தூத்துக்குடி அவர்களின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
