தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது.
110/22KV சிப்காட் துணை மின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (28.08.2020 வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்,
சிப்காட் வளாகம், கணேசன் நகர், ராஜிவ் நகர், மில்லர்புரம் பகுதிகள், மடத்தூர், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3 வது மைல், பத்திநாதபுரம்,சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், EB காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர் , சில்வர்புரம், பசும்பொன் நகர், கிருபை நகர்,
பால்பாண்டி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவும்…
மேலும் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் தரம் உயர்த்தும் பணி நடைபெற இருப்பதால் ஆசிரியர் காலனி,
தேவகி நகர், சின்னமணி நகர், கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் /விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
