விபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதாளசாக்கடை குழியை மூடிய தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று தூத்துக்குடி K.T.C.நகர் (ஹவுசிங்போர்டு) பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு இல்லாமல் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் குழந்தைகள் தவறி விழ வாய்ப்புள்ள நடுரோட்டில் ஆள்துளை கிணறு போல காட்சியளிக்கும் பாதாளசாக்கடை குழியை தூத்துக்குடி நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் இன்று மண் மற்றும் கற்கள் போட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதாளசாக்கடை குழியை மூடினார்கள்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர் மரிய ஹான்ஸ், 1வது பகுதி செயலாளர் மணிகண்டன் சுந்தரவேல் புரம் 6 வது வார்டு நாம் தமிழர் உறுப்பினர்கள் நாகராஜ், சாமி, அசோக், சரவணன், அப்பு, அசோக், ராம், சூர்யா ஆகியோர் களப்பணியாற்றினாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *