தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 46 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 46 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்று 38 புதிய நோயாளிகள் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி மொத்தம் 234 பேர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று நோய் தொற்றினால் எந்த உயிரிழப்பும் இல்லை