தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் இதுவரை 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 8 காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (17.07.2020) காலை தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை தூத்துக்குடி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.