சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 10) மாலை 3 மணிக்கு வெளியீடு

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே ஐசிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்ளுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்களில் காணலாம்.

குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அதற்குத் தங்களின் ஐடி எண்ணை 09248082883 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டியது அவசியம். ICSE/ISC (Unique ID) என்ற முறையில் அனுப்பினால் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

கடந்த ஆண்டு மே 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 98.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *