jasmine

மலை அளவு உயரும் மல்லிகை பூவின் விலை

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூவின் விலை கிலோ 4000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தொடர் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருப்பதால் மல்லிகை மற்றும் இதர பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.தை பொங்கலை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் கடந்த வாரம் 2000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ 3500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தொடர் பனி பொலிவு காரணமாக மேலும் மல்லிகை பூவின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *