” ஸ்டெர்லைட் தொடர்பாக இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் 1 லட்சம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், ” என ஸ்டெர்லைட் செயல் அதிகாரி பங்கஜ் குமார் தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்
மாசு பிரச்சினையால் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர், இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, இதனை எதிர்த்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது,
இந்த தீர்ப்பை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ,பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது அவர் கூறியதாவது:-
“ஸ்டெர்லைட் தொடர்பான இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் 1 லட்சம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்,
இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதம் உற்பத்தி செய்து வந்தோம் காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு காப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது
புதிய தொழிற்சாலைகள் துவங்குவதை ஊக்குவிக்கும் நேரத்தில் எங்களை போன்ற ஆலைகளை மூடுவதற்கும் அரசு காரணமாகிறது. சர்வதேச தரத்தில் ஆலை இயங்கி வந்தது, கழிவுகள் வெளியேற்ற அரசு கூறப்பட்ட தர நிர்ணயத்தில் 40 சதவீதம் மட்டுமே வெளியேற்றப்படுகிறது, நீதித்துறையின் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது தீர்ப்பின் முழு விபரங்களையும் படித்த பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம் சட்ட ரீதியாக வழக்கை தொடருவோம். ஆலை மூடப்பட்டதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா என்பது குறித்து தற்போது கூற முடியாது ” என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது ஆலையின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் தனவேல் உடனிருந்தார்