சென்னையில் மாயமான பைக் திருநெல்வேலியில் சிக்கியது… எப்படி?!!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் கபிலன் என்பவரது வீட்டுமுன் நிறுத்தி பைக் கடந்த மாதம் காணாமல் போனது. இதனை அவர் சூளைமேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கபிலன் செல்போனுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என என காவல் துறை தரப்பில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கபிலன், குறுஞ்செய்தி குறித்து சூளைமேடு போலீஸாரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். சூளைமேடு போலீஸார் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதி போலீஸாரால் அபாரதம் விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போதெல்லாம விதிமீறலுக்கான அபராதம் இ-சலான் இயந்திரங்கள் மூலமும், டெபிட் அல்லது கிரடிட் கார்டுகளைக் கொண்டு பெறுவதால். அபராதம் விதிக்கப்படும்போது, வாகன உரிமையாளரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும். இப்படிதான் கபிலனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி போலீஸாரிடம் விசாரிக்கப்பட்ட போது, பைக்கை ஓட்டி வந்த நபர், திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையா (27) எனத் தெரியவந்தது. திருநெல்வேலி விரைந்த போலீஸார் கொம்பையாவை கைது செய்ததோடு அவரிடமிருந்து 6 கார்கள், 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை அழைத்து வந்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, ‘பொறியியல் பட்டதாரியான கொம்பையா, சென்னையில் உள்ள சகோதரி கணவர் அருணாச்சலம், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத், தில்லை நடராஜன், வானமாமலை ஆகியோருடன் இணைந்து, பைக் மற்றும் கார் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருடும் வாகனங்களை சாலை ஓரங்களில் சில பல வாரங்களாக நிறுத்தி வைத்து விட்டு, பின்பு பழைய வாகனம்போல் எடுத்துச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம்’ என்று காவல்துறை சார்பில் கூடுகின்றனர்.