“தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்” – நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்திநாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த செல்வன் என்ற வாலிபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்பார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும், கொலை செய்யப்பட்டு இறந்த செல்வனின் மனைவி ஜீவிதாவுக்கு அரசு வேலை உடனே வழங்க வேண்டும், நிவாரண உதவியாக 50 லட்ச ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக திரண்டு வந்து காவல்துறையை கண்டித்து கோஷமிட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *