தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரனி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகா் மடுஜெபமாலை மாதா பங்கு ஆலயத்தில் கொரோனா எதிா்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு தந்தை நெல்சன்ராஜ் தலைமையில் தாளமுத்துநகா் காவல் நிலைய துனை ஆய்வாளா் விஜயகுமாா் அவா்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபசுர குடிநீரையும் ஹோமியோபதி கொரோனா நோய் எதிா்ப்பு சக்தி விலையில்லா மருந்தையும் பொதுமக்களுக்கு வழங்கினாா்கள்.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றாா்கள். இந்நிகழ்வை ஊா் நிா்வாகிகள் பால்ராஜ், சிலுவை அந்தோனி, அமல்ராஜ், பாலா, தேவதாஸ், ஜெயசீலன் ஆகியோா் செய்திருந்தாா்கள். இவா்களுடன் சமூக ஆா்வலா் இராஜபாளையம் தொம்மை அந்தோனியும் கலந்துகொண்டாா்.