தூத்துக்குடி மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்வு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதிக்குட்பட்ட தாளமுத்துநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுர பகுதிகளில் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின நாளான இன்று (05.09.2020) சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தாளமுத்துநகர் RC பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு. தேவசகாயம் அவர்கள், தமிழ்நாடு ஆயுத படை காவலர் விஜய் அவர்கள், தொழில் அதிபர் திரு. விக்டர் அவர்கள், மற்றும் சிலுவைப்பட்டி மீனவ சங்க இயக்குனர் திரு. அந்தோணி தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் MRS GROUPS இணைந்து களப்பணியாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *