தமிழக அரசு அறிவிப்பின் படி ஜூலை 05,12,19,26 ஆகிய தேதிகளில் மட்டும் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி 18.07.2020 இரவு 12 மணி முதல் 20.07.2020 காலை 6 மணி வரை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளது இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் சென்று வருகின்றனர். மேலும் வரும் 26.7.2020 ஞாயிற்றுகிழமை அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜூலை 3ம் தேதி அறிவித்திருந்தார்.