அரசு பள்ளியில் இலவச லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா – திருச்சி

திருச்சி அடுத்த காட்டூரில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 128 மாணவர்களில், 52 பேருக்கு 3 மாதத்திற்கு முன்பு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 76 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காததால் அதனை கண்டித்தும், இலவச லேப்டாப் உடனடியாக வழங்க கோரி மாணவர்கள் நேற்று, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பள்ளி நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மாணவர் சங்க செயலாளர் மோகன் குறுக்கிட்டு பேசியதால் ஆத்திரமடைந்த சிஇஓ அவரை கண்டித்ததுடன், மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கும்படி தலைமையாசிரியரிடம் கூறினார். அவர்களின் புகார் தொடர்பாக திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், தாசில்தார் ஞானாமிர்தம் ஆகியோர் வந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் பேசியதாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அப்போது மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை மறித்ததால் பரபரப்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வினால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *