volleyball

மாணவர் மாநில கடற்கரை கைப்பந்து போட்டி முடிவுகள் 2019-2020

சேலம், மதுரை, நாகப்பட்டினம் மாணவர்கள் முதலிடம்

தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின கடற்கரை கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சார்பாக தருவைக்குளம், கடற்கரையில் கடந்த 30.01.2020 முதல் 31.01.2020 வரை நடைபெற்றது. போட்டிகளை, தமிழக பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர் (என்.எஸ்.எஸ்) திரு.வாசு அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் திரு.பால்சாமி, திருமதி.வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலிடம் பெற்ற அணிகள் பங்கு பெற்றனர். 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இன்று 31.01.2020 இறுதி போட்டிகள் நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை பாரதியார் மெட்ரிக் பள்ளி, ஆத்தூர், சேலம் மாணவர்கள் சி.வி.சிவகளைஞானம் – கே.கதிரவன் ஜோடி பெற்றுள்ளார்கள். இரண்டாம் இடத்தை அகர்வால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் மாணவர்கள் அதுல் நாயக் – கபாஷ்சகானி ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம், மாணவர்கள் பிரகாஷ் சிவா ஜோடி பெற்றுள்ளார்கள்

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அமெரிக்கன்
காலேஜ் மேல்நிலைப்பள்ளி, தல்லாகுளம், மதுரை மாணவர்கள் பூந்தமிதன் கோகுல் ஜோடி பெற்றுள்ளார்கள். இரண்டாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி, நாகப்பட்டிணம் மாணவர்கள் அபிதன்-காஜாசிராஜுதின் ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை SKY மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மெய்யூர் திருவண்ணாமலை பெற்றுள்ளார்கள். மாணவர்கள் கருணா-பாலாஜி ஜோடி

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி, நாகப்பட்டினம் மாணவர்கள் கிளிண்டன்-விக்னேஷ் ஜோடி பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ்-கிருஷ்ணராஜ் ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை ரைஸ்சிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை, தஞ்சாவூர் மாணவர்கள் முகமது-ஈஸ்வானுதின் ஜோடி பெற்றுள்ளார்கள்.

31.01.2020 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஞானகௌரி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள். விழாவில் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.பால்சாமி, ஆகியோர்
முன்னிலை வகித்தவர்கள் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.அன்றோரூபன் வரவேற்புரையாற்றினார்கள். விழாவில் இறுதியில் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவிகாந்த் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வி.வி.டி உடற்கல்வி ஆசிரியர் திரு.அந்தேணி சதீஷ் சந்திரன் அவர்களின் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார் பெலின்பாஸ்கர், ரவிச்சந்திரன், ஜோதிபாசு, பெல்சன், தனபாலன், முத்துராஜன், ருக்மணி, நர்மதா, மற்றும் திவ்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.