ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு, அதனை தொடர்ந்து தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு இனிப்பு வழங்கிய போது அதனை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சார்ந்த பேராசிரியர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் பழரசம் வினாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், வழக்கறிஞர் அதிசயகுமார், செந்தில் ஆறுமுகம், ராஜா ஆகியோர் இனிப்பை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் பெரு நகர செயலாளர் ஏசாதுரை, மாநகர பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், பி.என். ராமகிருஷ்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ், மாநகர மேற்குப்பகுதி அவைத்தலைவர் சந்தனம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.