தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு யாக வழிபாடுகள் ஸ்ரீசித்தர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இன்று ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக நீங்கிடவேண்டியும், உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், தமிழகத்தில் பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்கவேண்டியும் சிறப்பு மஹா யாக வேள்வி வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய வழிபாடுகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், பக்தர்கள் அரசின் வழிகாட்டுதல்படி முககவசம் அணிந்தும், தகுந்த தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் கலந்துகொண்டு வணங்கி சென்றனர்.