14 சீனர்களுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு அனுமதி!!!

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு எங்கும் அனுமதியில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பீதியில் உள்ள சூழலில் சீனர்கள் 14 பேர்களை கொண்ட பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ‘ரூயி’ தற்போது துாத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வந்தவர்களுக்கு ‘கோவிட் – 19’ சோதனை செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை எனவே துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் தமிழகத்திலும் ‘கோவிட் – 19’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலை உள்ளது.