தூத்துக்குடியில் மத்திய அரசின் தொழில்நுட்ப உயிரியல் துறை சார்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் கருத்தரங்கம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மத்திய அரசின் தொழில்நுட்ப உயிரியல் துறை சார்பில் ஸ்டார் கல்லூரி திட்டத்தின் கீழ் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கம் ஜனவரி 30 ,31 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி லூசியா ரோஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கருத்தரங்கின் முதல் நாளன்று முனைவர் உமாதேவி, இணைப்பேராசிரியர் மற்றும் இயற்பியல் துறை, தலைவி(பொறுப்பு), அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல், முனைவர் சி.வேதி, உதவி பேராசிரியர், வேதியியல் துறை, வ. உ. சிதம்பரனார் கல்லூரி தூத்துக்குடி, முனைவர் கிருஷ்ணமூர்த்தி, விஞ்ஞானி, தேசிய வேதியியல் ஆய்வகம், புனே. முனைவர் ரமேஷ் பாபு, இணைப்பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி ஆகியோர் நானோ நுட்பங்கள், கண்ணாடிகள், பற்றிய விளக்கங்களையும் இவை நம் அன்றாட வாழ்வில் பெரும் முக்கியத்துவங்கள் அவற்றின் வளர்ச்சிகள் பற்றிய விபரங்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இரண்டாம் நாளன்று முனைவர் ராஜேஷ், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை, சி.சி. ந. பொறியியல் கல்லூரி, சென்னை, முனைவர். சுகுணா பெருமாள், ஆய்வு பேராசிரியர், பயன்பாட்டு வேதியியல் துறை, யுங்புக் தேசிய பல்கலைககழகம் தென் கொரியா, முனைவர் சந்திர போஸ், இணைப்பேராசிரியர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர்,முனைவர் சாம்சன் நேசராஜ், பேராசிரியர்,பயன்பாட்டு வேதியியல் துறை, காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம், கோயம்புத்தூர், ஆகியோர் மாணவர்களுக்கு, நானோ பொருட்கள், கலவைகள் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் பண்புகளை பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இக்கருத்தரங்கின் ஏற்பாடுகளை ஸ்டார் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் இயற்பியல் துறை தலைவி சௌ. யூக்கிரிஸ்டா இமாகுலேட் சில்வியா மற்றும் வேதியியல் துறைத் தலைவி சே. மார்ட்டின் ரதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *