விதை விதைப்பு இயந்திரம் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கண்டுபிடிப்பு

விவசாயத்துக்கான விதை விதைப்பு இயந்திரத்தை கண்டுபிடித்து கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுரி முன்னாள் மாணவர் சாதனை படைத்துள்ளார்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2019ஆம் ஆண்டில் இயந்திரப் பொறியியல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர் எஸ்.ராஜ்குமார், விதை விதைப்பு இயந்திரத்தை உருவாக்கி, அதை என்.இ.சி. வணிகக் கருவகம் மூலம் சந்தைப்படுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல், என்.இ.சி. வணிகக் கருவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத், ஒருங்கிணைப்பாளர் மணிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கல்லூரியில் உள்ள என்.சி.இ. வணிகக் கருவகம், கே.ஆர். இன்னோவேஷன் சென்டர் உதவியுடன் தொடங்கப்பட்ட நிறுவனமான ராம்ஜி அக்ரோ இம்ப்ளிமென்ட்ஸ் விவசாயிகளுக்கான விதை விதைப்பு இயந்திரத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், தனது கல்லூரி படிப்பின்போது டிராக்டர் ரியல் லோடர் இணைப்பு என்ற தயாரிப்பை என்.இ.சி.யின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் ரூ.2.50 லட்சம் நிதியுதவியாகப் பெற்று தயாரித்தேன். இந்த விதை விதைப்பு இயந்திரத்தை விவசாயிகள் டிராக்டரில் பொருத்தி சிறிய மற்றும் பெரிய அளவிலான விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சோளம், பருத்தி, சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பயறு விதைகளை தேவையான அளவில் தேவையான இடைவெளி விட்டு துல்லியமாக விதைகளை விதைக்கலாம். இந்த உபகரணத்தின் மூலம் ஒரு விவசாயி நாள் ஒன்றுக்கு 20 ஏக்கர் நிலத்தில் விதை விதைப்பு செய்ய முடியும். 100 வேலையாட்களின் பணிச்சுமையைக் குறைக்கும் எனவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் நிலத்தில் உழவு மேற்கொள்ளும்போது விதைகள் தானாக நிலத்தில் விழும். அதற்கு தேவையான அளவு அடி உரமும் அதில் தூவப்படும். இது மானாவாரி விவசாயத்துக்கு ஏற்றதாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *