பொது மாறுதலுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம்: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை, அவரவர் பணியாற்றும் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

இன்று (19.07.2020) இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திக்குளம் ஆகிய உட்கோட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 193 காவல் ஆளினர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கி, அனைத்து காவல்துறை ஆளினர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்; அவர்களே நேரடியாக கபசுரக்குடிநீர் வழங்கினார்.

காவல் ஆளினர்கள் விருப்பத்தின்பேரிலேயே அவர்கள் விரும்பி கேட்ட காவல் நிலையங்களிலேயே பணி மாறுதலுக்கான ஆணை வழங்கினார். ஆகவே காவல்துறையினர் நல்லமுறையிலும், பொதுமக்களிடம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் (18.07.2020) இன்றும் (19.07.2020) காவல்துறை ஆளினர்கள் சுமார் 400 பேருக்கு கலந்தாய்வின் மூலம் பணி மாறுதல் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பழனிக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமாறுதலுக்கான காவல்துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *