அத்திமரப்பட்டி கிராமத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

இன்று (17.08.2020) காலை தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது, கொரோனாவை பொறுத்தவரை கிராமம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று சமூக வலை தளங்கள், செய்தித்தாள் அனைத்திலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. முதலில் இந்த வைரஸ் சென்னையிலிருந்து, நகரங்களுக்கு வந்து, பின் கிராமப் பகுதிகளிலும் இது பரவி வருகிறது. தற்போது இது எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது என்றால் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும்,

அந்த விழிப்புணர்வு கிராம மக்களிடைய வந்து கொண்டிருப்பதால்தான் இந்த தொற்று எல்லா இடங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. இது நாளை போய் விடும் என்று நினைக்க முடியாது, குறைந்தது 3, 4 மாதங்கள் வரையிருக்கும், அது வரை உயிர்க்கவசமான இந்த முகக்கவசத்தை அணிய வேண்டும். அதே போன்று அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தலைவர் அழகுராஜா, ஏ.எஸ் நகர் மக்கள் நல்வாழ்வு குடியிருப்போர் சங்க தலைவர் கணேஷ் மற்றும் அத்திரமரப்பட்டி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் உட்பட காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *