kovil

23 நாளில் ரூ.2.06 கோடி காணிக்கை – திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜனவரி மாத உண்டியலில் 23 நாளில் ரூ.2.06 கோடி காணிக்கையாக கிடைத்தது. இது முன் எப்போது இல்லாத வகையில் கணிசமான அளவில் காணிக்கை அதிகரித்துள்ளது.

இக்கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல் மூலம் காணிக்கைகள் இரு நாட்கள் எண்ணப்படும். ஜனவரி மாதத்திற்கான உண்டியல் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் அமரித் தலைமை வகித்தார். தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் முருகன், ஏரல் சிவலோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, குமாரமோகன், கருப்பன் ஆகியோர் கலந்து கொணட்னர். உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றம் சிவகாசி பதினென்சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக குழுவினர் ஈடுப்பட்டனர்.

இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி 89 லட்சத்து 72 ஆயிரத்து 127ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 555ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 532ம், கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.13 லட்சத்து 18 ஆயிரத்து 721ம், சிவன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.9 ஆயிரத்து 663ம் காணிக்கையாக கிடைத்தது. ஆக மொத்தம் ரூ.2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 காணிக்கையாக கிடைத்தன. இதே போல் தங்கம் ஆயிரத்து 630 கிராமம், வெள்ளி 27 ஆயிரத்து 523 கிராம் கிடைத்தன. வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 161 கிடைத்தன. ஜனவரி மாத உண்டியல் மூலம் ரூ.2 கோடிக்கு மேல் உண்டியல் மூலம் காணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *