பீஸ் மேக்கர் கிரிக்கெட் கிளப் அணி” யினருக்கு, ரூ.10,000 மதிப்புள்ள கிரிக்கெட் விளையாட்டு உபகரணம் – ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்றத் தலைவர் அ.இளையராஜா , வழங்கினார்
நேற்று (01.09.2020 செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரம் ஊராட்சியில் உள்ள கொம்பாடி தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த, “பீஸ் மேக்கர் கிரிக்கெட் கிளப் அணி” யினருக்கு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஊராட்சித்தலைவர்களின் கூட்டமைப்பு துணைத்தலைவரும், ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்றத் தலைவருமான அ.இளையராஜா , ரூ. 10,000 மதிப்புள்ள கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.
விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கிய, அ.இளையராஜா அவர்களுக்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஊராட்சித்தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பாக, மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என ஓட்டப்பிடாரம்_ஒன்றிய_ஊராட்சித்தலைவர்களின்_கூட்டமைப்பு தெரிவித்துள்ளது