இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.இதில், சஷ்மிதா என்ற மாணவி முதலிடத்தையும், நவநீதகிருஷ்ணன் என்பவர் 2வது இடத்தையும், காவ்யா என்ற மாணவி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதன் பின்னர் அமைச்சர் அன்பழகன் கூறுகையில், முதல் 10 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தரவரிசைபட்டியலில் தவறு இருந்தால், மாணவர்கள் புகார் அளிக்கலாம். அது பின்னர் திருத்தி வழங்கப்படும். 1,12,406 பேர் விண்ணப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு 27 கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது. 8 கல்லூரிகள் புதிதாக திறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இறுதிப்பட்டியல் 6ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *