தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி சாத்தான்குளம் மற்றும் கருங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்த்திட்டத்தின் வாயிலாக பொது முடக்கத்தால் இழந்த பொருளாதார இழப்பினை ஈடுசெய்வதற்கு உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு தலா ரூ.150000/- வீதம் மானியமாக வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5 உற்பத்தியாளர் குழுக்கள் 2 தொழிற்குழுக்களுக்கு மானியமாக ரூ.1050000த்திற்க்கான வரைவோலை வழங்கும் நிகழ்வில் வட்டார திட்ட செயலர் மகேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த்தன் மற்றும் பொற்செழியன் தலைமையுரையாற்றினார்கள். மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் திட்ட விளக்கவுரை வழங்கினார். வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஜ.முகைதீன் மற்றும் நபார்டு வங்கி மேலாளர் சுரேஸ் சிறப்புரையாற்றி 5 உற்பத்தியாளர் குழு மற்றும் 2 தொழிற்குழுக்களுக்கு ரூ.1050000த்திற்க்கான வரைவோலை வழங்கினார்கள். இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குநர் மார்டின்ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, வட்டார பொறுப்பு அலுவலர் இளம்வல்லுநர் புஸ்பராஜ், செயல் அலுவலர்கள் ஜான்சிராணி, ராதா மற்றும் அலுவலக பணியாளர் மாரியப்பன் மற்றும் மகளிர் திட்ட வட்டார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *