பெருந்தலைவா் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சாதி, மதம், இனம் வேறுபாடின்றி சமுக பணிகள் ஆற்றியவர்களுக்கு தபால் தலை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.
பெருந்தலைவா் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்றம் சார்பில் சாதி, மதம், இனம் வேறுபாடின்றி சமுக பணிகள் ஆற்றி வரும் தருவைகுளம் பங்குதந்தை அருட்திரு எட்வா்ட் ஜோ, காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளர் S.A லாரன்ஸ் ஆகியோரின் சேவையை பாராட்டும் வகையில் அவர்களுது உருவம் பொறித்த 5 ரூபாய் தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் பனை தொழிலாளர் சங்க பொதுக்செயலாளர் ராயப்பன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் காமராஜர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தூத்துக்குடி மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.