நடத்துனரை தாக்கிய காவலர்கள் – நெல்லை

நெல்லை அருகே அரசு பேருந்து நடத்துனரை, ஆயுதப்படை போலீசார் இருவர் தாக்கிய சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆயுதப்படை சேர்ந்த காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தில் வருகின்ற 29-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. , அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது, குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட காவல் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் இவ்விரு காவலர்களும் பயணம் செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்துநர் ரமேஷ் என்பவர், பயணச் சீட்டை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பணிநிமித்தமாக செல்வதாக கூறியுள்ளனர்.
உரிய ஆவணத்தை போலீசார் காண்பிக்கவில்லை என தெரிகிறது. எனவே, இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காவலர்கள் இருவரும் நடத்துநர் ரமேஷை சரமாரியாகத் தாக்கியதில் அவர் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதையடுத்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில், பஸ் நடத்துனர் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *