உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் வாடகை வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை முற்றிலுமாக தமிழக அரசு கைவிட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
அம்மனுவில் கூறியதாவது ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சாலை வரிகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும், ஊரடங்கு காலத்தில் வாகன தவணைக்கு விதிக்கப்பட்ட வட்டி மற்றும் அபராதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும், 2020 மார்ச் மாதத்திற்கு முன்பு வாகன தவணைகளில் நிலுவைகள் இருந்தால் அவைகளை செலுத்துவதற்கு முழு ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் மீறும் நிதி நிறுவனங்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.