எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும்புதிய சலுகை…

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் பலவற்றை சில காலங்களாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகிறார்கள். தற்போது அளித்த புதிய சலுகையின் படி குறைந்த பட்ச தொகை வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.25000 குறைந்தபட்சம் இருப்புத்தொகையாக எஸ்பிஐ வங்கியில் வைத்திருப்பவர்கள் ஏடிஎம்களில் வரம்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்சமாக 40 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். மற்றும் 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை அனுபவிக்கலாம். இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *