தூத்துக்குடி ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் தோ்பவணி, முளைபாாி நிகழ்ச்சிகள் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதி என்பதாலும் ரேஷன்கடை பகுதி, அந்தோணியாா் கெபி தெரு, அய்யர் விளை, கல்வாரி நகர் பகுதிகளில் அதிகதிறன் கொண்ட LED லைட் பல்ப் மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த சமூக ஆர்வலர் அந்தோணி பிரகாஷ் மாா்சிலின் அவர்களுக்கு பொது மக்கள் பலர் நன்றி தெரிவித்து உள்ளனர்.
