தேசிய திறனாய்வு தேர்வு – நெடுங்குளம் பள்ளி மாணவன் இசக்கிமுத்து வெற்றி !..

தேசிய திறனாய்வுத் தேர்வில் நெடுங்குளம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி மாணவன் இசக்கிமுத்து வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி மாணவன் இசக்கிமுத்து வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்ந்துள்ளான். வெற்றி பெற்ற மாணவனுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் வரை மாதம் ரூ ஆயிரம் வீதம் மத்திய அரசு நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

வெற்றி பெற்ற மாணவனை பள்ளித் தாளாளர் சேவியர் கிங்ஸ்டன், பள்ளிதலைமை ஆசிரியர் ஸ்டீபன்தாஸ், நெடுங்குளம் ஊராட்சித் தலைவர் சகாயஎல்பின், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முரசொலிமாறன் மற்றும் ஆசிரியைகள், ஊர் மக்கள் பாராட்டினர்.

Source: Chendur times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *