தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையால் தாக்கப்பட்ட சாத்தான்குளம் மார்டின் மனைவி மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.