தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 12.08.2020 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி செவன்த்டே பள்ளி அருகே தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் பிருத்திவிராஜ்(22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரை விசாரணை செய்ததில் தூத்துக்குடி, குறிஞ்சிநகரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் மகாராஜன்(36) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சோலையப்பன்(33) ஆகியோர் சேர்ந்து வடமாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாக காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி 3 எதிரிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1¼ டன் எடையுள்ள புகையிலை பொருட்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கின் முக்கிய எதிரியான மகாராஜன் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரி மகாராஜன் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர்‌ திரு. அருள் அவர்கள், எதிரி மகாராஜன் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *