தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் ஒன்றியத்தில் கடனுதவி வழங்கும் திட்டம்

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்திவரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி வட்டாரங்களைச் சார்ந்த 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.

முதலில் வரவேற்புரை மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் நோக்கங்கள் பற்றி மணிராஜ், (வட்டார செயலர், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம்) பேசினார்.

பின்னர் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் சாத்தான்குளம் ஒன்றியத்தில் பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்கிட தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், 6 ஊராட்சியில் உள்ள 8 இளைஞர்களுக்கு தலா ரூ.1,00,000 வீதம் ரூ.3,00,000 கடனுதவியினை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் 24 ஊராட்சிகளுக்கு 607நபர்களுக்கு ரூ.12,600), (DON ஒரு கோடியே இருபத்தி ஆறு இலட்சம் ) ரூபாய் கடனுதவி ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலினை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்து.

சாத்தான்குளம் வட்டாரங்களைச் சார்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 18 முதல் 35 வரை மற்றும் பெண்களுக்கு எனில் 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிதி உதவியை பெற தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட சாத்தான்குளம் வட்டார அலுவலகத்தில் நேரிலோ அல்லது கீழ்கண்ட கைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

(8778228732) (7010072643 (9629694481) மேலும் இறுதியாக வட்டார (மேலாளர் (TNSRLM) செ.ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *