தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு 11.07.2020 அன்று அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு நாளை 11.07.2020 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (2) இன் படி அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ” என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக முழுமையான ஊரடங்கு கருத்தில் கொண்டு இந்த மாதம் (ஜூலை) நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளும் மூடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் , தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை , மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள்,பார்கள் மூடப்படுவது குடிகாரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *